

சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ஓடிடி தளங்கள் மற்றும் ட்விட்டர் உள்ளிட்டவை தன்னிச்சையாக செயல்பட்டு வந்தன. இவற்றை முறைப்படுத்தும் வகையில், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. டிஜிட்டல் ஊடகங்களுக்கான இந்த புதிய விதிமுறைகள் கடந்த மே மாதம் அமலுக்கு வந்தன்.
முக்கியமாக இந்த டிஜிட்டல் ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். பயனாளிகள் அளிக்கும் புகார் தொடர்பாக எவ்வளவு காலத்திற்குள் பதில் அளிக்கப்பட்டது என்ற விவரமும் பதிவு செய்யப்பட வேண்டும். குறை தீர்ப்பு மையமும் உருவாக்கப்பட்ட வேண்டும். அத்துடன் பயனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அதன் செயல்பாடு இருக்க வேண்டும் என்பதும் விதிமுறையாகும்.
இந்நிலையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ட்விட்டர் நிறுவனம் வேண்டுமென்றே செயல்படுத்த வில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.- பிடிஐ