Published : 16 Jun 2021 09:45 AM
Last Updated : 16 Jun 2021 09:45 AM

தினசரி கரோனா தொற்று 62,224 ஆக சரிவு: சிகிச்சையில் உள்ளோர்  8,65,432 ஆக குறைவு

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று 62,224 குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 8,65,432ஆக குறைந்தது.

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,224ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,96,33,105

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 62,224

இதுவரை குணமடைந்தோர்: 2,83,88,100

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,07,628

கரோனா உயிரிழப்புகள்: 3,79,573

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 2542

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 8,65,432

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 26,19,72,014
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 28,00,458

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x