

பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து சிறையிலும் புகை பிடிப்பதற்கு கேரள அரசு தடை விதித்துள்ளது.
சிறைகளில் இந்த உத்தரவை அமலாக்க அனைத்து சிறை அதிகாரி களுக்கும் ஒரு சுற்றறிக்கையை டி.ஜி.பி. (சிறை) டி.பி. சென்குமார் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து டி.ஐ.ஜி. (சிறை, வடக்கு மண்டலம்) சிவதாஸ் கே தைபரம்பிள் கூறியபோது, "பொது இடங்களில் புகை பிடிக் கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருந்தாலும் அது சிறைகளில் கடுமையாகக் கடைப்பிடிக்கப் படுவதில்லை. இந்தப் பழக்கத் தில் இருந்தும் உடனடியாகப் புகை பழக்கத்தைக் கைவிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. புகை பழக் கத்துக்கு எதிரான விழிப்புணர்வு நட வடிக்கைகளும் மேற்கொள் ளப்பட இருக்கின்றன" என்றார்.