சிறார் நீதி சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தல்

சிறார் நீதி சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தல்
Updated on
1 min read

தீவிர குற்றவழக்குகளில் தொடர்பு டைய 16 முதல் 18 வயது வரை உடையவர்களை வயது வந்த வர்களாகக் கருதும் சிறார் நீதிச் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என மாநிலங்களவை யில் நேற்று வலியுறுத்தப்பட்டது.

நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுள் ஒருவரான சிறுவன் குறைந்த தண்டனைக் காலத்துடன் விடுவிக்கப்பட்ட நிலையில் இக்கோரிக்கை எழுப் பப்பட்டது.

பூஜ்ஜிய நேரத்தின்போது பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், வழக்க மான அலுவல்களை ஒத்திவைத்து ‘சிறார் நீதிச் சட்டம் 2014’ விவ காரத்தை எடுத்துக் கொள்ளும்படி 267-வது பிரிவின் கீழ் நோட்டீஸ் அளித்தார்.

“அவர் பேசும்போது, குளிர் கால கூட்டத்தொடர் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளன. ஆனால், சிறார் நீதிச் சட்ட மசோதாவை அரசு விவாதத் துக்கு எடுத்துக் கொள்ளவும், நிறைவேற்றவும் பட்டியலிட வில்லை. அரசியலுக்கு அப் பாற்பட்டு அவையினர் இப்பிரச் சினையை எழுப்ப வேண்டும்” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்போது, “மசோதா இன்றைய பட்டியலில் இல்லை. எனினும் கடந்த வாரம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே சிறார் நீதிச் சட்ட மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் ஒப்புக் கொண்டது.

இன்று எஸ்.சி., எஸ்.டி (அட்டூழிய தடுப்பு) மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். சிறார் மசோதாவை நாளை (செவ் வாய்க்கிழமை) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்” என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in