

1.05 கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.
மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்பூசி திட்டம் மே 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
மத்திய அரசு இதுவரை, 26.69 கோடிக்கும் அதிகமான (26,69,14,930) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.
1.05 கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசி (1,05,61,861) டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 25,67,21,069 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த மூன்று நாட்களில் கூடுதலாக 47,43,580 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கவிருக்கிறது.