Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 03:12 AM

உத்தராகண்டில் 14,500 அடி உயரத்தில் நந்தாதேவி வனப்பகுதியில் ராணுவ பெண்கள் குழுவினர் ரோந்து

உத்தராகண்டில் 14,500 அடி உயரத்தில் நந்தாதேவி வனப்பகுதி யில் முதல்முறையாக ராணுவ பெண்கள் குழுவினர் ரோந்து சென்று சாதனை படைத்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் அருகே நந்தாதேவி வனப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் ராணுவக் குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் ராணுவத்தைச் சேர்ந்த துர்கா சதி (32), ரோஷ்னி நெகி (25), மம்தா கன்வாசி (33) ஆகியோர் அடங்கிய குழு நந்தாதேவி வனப்பகுதியில் சுமார் 14,500 அடி உயரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளது.

இந்த நந்தாதேவி சிகரமானது 25 ஆயிரம் அடி உயரம் கொண்டது. இந்த பெண்கள் ராணுவக் குழுவினர் 14,500 அடி உயரம் வரை சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மம்தா கன்வாசி கூறும்போது, “இந்த மலைப் பகுதியிலும், வனப்பகுதியிலும் நாங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு அரிய வனவிலங்குகளையும், தாவரங்களையும் பாதுகாத்து வருகிறோம். இப்பகுதியில் வேட்டைக்காரர்களின் அச்சுறுத் தல் உண்டு. எனவே, நமது எல்லைப் பகுதியை நாம் பாதுகாப்புடன் வைத்திருப்பது அவசியம். அதற்காகவே இந்த சவாலான ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

ரோஷ்னி நெகி கூறும்போது, “வழக்கமாக ராணுவ பெண் கள் குழுவினர் 11,150 அடி உயரத் திலுள்ள லாட்டா சிகரம் வரை அனுமதிக்கப்படுவர். அதையும் தாண்டிச் செல்ல கூடாதா என்று நாங்கள் கேள்வி எழுப்பினோம். எங்களிடம் அந்தப் பணியைக் கொடுத்தால் செய்வோம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அதன்பின் இந்த வாய்ப்பு கிடைத்தது. ஜூன் 1-ம் தேதி பேல்டா (11,800 அடி உயரம்) சிகரத்துக்கும், அதைத் தொடர்ந்து லாட்டா கார்க் (12,800 அடி) சிகரத்துக்கும், அதைத் தொடர்ந்து ஜாந்திதரா (13,800 அடி) சிகரத்துக்கும் சென்றோம். பின்னர் லாட்டா கார்க் சிகரத்திலிருந்து தாராசிக்கு (14,500 அடி உயரம்) சென்றோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x