Published : 14 Jun 2021 09:39 am

Updated : 14 Jun 2021 09:39 am

 

Published : 14 Jun 2021 09:39 AM
Last Updated : 14 Jun 2021 09:39 AM

72 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று 70,421 ஆக சரிவு

india-reports-70-421-new-covid19-cases-lowest-in-last-72-days
பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று கடந்த 72 நாட்களுக்கு பிறகு 70,421 குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,421 ஆக குறைந்துள்ளது.


கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,95,10,410

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 70,421

இதுவரை குணமடைந்தோர்: 2,81,62,947

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,19,501

கரோனா உயிரிழப்புகள்: 3,74,305

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 3921

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 9,73,158

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 25,48,49,301

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



தவறவிடாதீர்!

இந்தியாதினசரி கரோனா தொற்றுபுதுடெல்லிகுணமடைந்தோர்India reports#COVID19

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x