Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

காஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவல், தீவிரவாதம் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதன்பிறகு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிற மாநில மக்கள்காஷ்மீரில் நிலம் வாங்க சட்டபூர்வமாக அனுமதி வழங்கப்பட் டுள்ளது.

மஜுன் கிராமம் தேர்வு

இதைத் தொடர்ந்து இந்துக்கள் அதிகமாக வசிக்கும் ஜம்மு பகுதியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழு மலையான் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 7 இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் ஜம்மு அருகேயுள்ள மஜுன் கிராமம் தேர்வு செய் யப்பட்டது.

அந்த கிராமத்தில் ஏழுமலை யான் கோயிலுக்காக 62.06 ஏ்ககர் நிலத்தை ஜம்மு-காஷ்மீர் நிர்வாக கவுன்சில் 40 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வழங்கியது. அங்கு கோயில் கட்ட நேற்று பூமி பூஜை நடைபெற்றது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஊடுருவல், தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக காஷ்மீரிலோ, இந்தியாவின் வேறு பகுதியிலோ மிகப்பெரிய வன்முறை சம்பவங்கள் நடை பெறவில்லை.

காஷ்மீரின் வளர்ச்சியில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் 36 மத்திய அமைச்சர்கள் காஷ்மீரில் முகா மிட்டு வளர்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்தினர். கரோனா காலத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டிருக்கிறது. கரோனா தொற்று பரவல் குறைந்த பிறகு திட்டப் பணிகள் தீவிரமடையும்.

ஜம்முவில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டப் படுகிறது. இனிமேல் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையான் கோயிலுக்கும் வருகை தருவார்கள்.

இவ்வாறு இணை அமைச்சர் கிஷண் ரெட்டி பேசினார்.

ஜம்முவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கிஷண் ரெட்டி பங்கேற்று மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரங்கள், நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x