Published : 13 Jun 2021 09:25 AM
Last Updated : 13 Jun 2021 09:25 AM

ஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை: ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடைபெற்றுவரும் ஜி7 மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை என்ற கொள்கையை முன்வைத்தார்.

ஜி 7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது. பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள காா்பில் பே பகுதியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், இத்தாலி பிரதமர் மரியோ தராகி மற்றும் ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷிஹைட் சுகா கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

அவர் பேசியதாவது:

கரோனா பெருந்தொற்றை இந்தியா ஒட்டுமொத்த சமூகமாக இணைந்து எதிா்கொண்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறியவும், தடுப்பூசிகளை நிா்வகிக்கும் பணியிலும் டிஜிட்டல் உபகரணங்களை இந்தியா வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளது. உலக அளவில் சுகாதார நிா்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும். அதற்கு, ஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை தேவை. இனிவருங்காலத்தில் இதுபோன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதைத் தடுக்க உலகளாவிய ஒற்றுமை இருக்க வேண்டும். இதில் வெளிப்படையான ஜனநாயக சமூகங்களுக்கு சிறப்புப் பொறுப்பு உள்ளது.

— PIB India (@PIB_India) June 12, 2021


கரோனா சிகிச்சை மருந்துகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்யவும், கரோனா பரவலை தடுத்து சிகிச்சையளிக்க தேவைப்படும் தொழில்நுட்பங்களுக்கு வா்த்தகம் சாா்ந்த அறிவுசாா் சொத்துரிமைகளுக்கான ஒப்பந்தத்தில் (டிரிப்ஸ்) இருந்து விலக்களிக்கவும் உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியாவும், தென் ஆப்பிரிக்கா பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைகளுக்கு ஜி7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தாா்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x