

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டியில் பாஜக, சிவசேனா கூட்டணி முறிந்தது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியக் குடியரசு கட்சியின் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நேற்று கூறும்போது, " மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையேயான உறவை புதுப்பிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸிடம் பேசியுள்ளேன். மேலும் பிரதமர் மோடியுடனான சந்திப்பிலும் இதுகுறித்து விவா திக்க உள்ளேன்" என்றார். - பிடிஐ