

கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக்கூட்டத்தொடர் நேற்று முடிவடைந்தது.
இந்த கூட்டத்தொடரில் நிறை வேறும் என எதிர்பார்க்கப்பட்ட சரக்கு சேவைவரி மசோதா நிறைவேறவில்லை.
மொத்தம் 20 அமர்வுகள் நடைபெற்றன. மாநிலங்களவை யில் ஒவ்வொரு நாளும் காங்கி ரஸ் கட்சிதொடர்ந்து எழுப்பிய பிரச்சினைகள் காரணமாக 47 மணி நேரம் வீணானது. இதனுடன் ஒப்பிட்டால் மக்களவை செயல்பாடு சற்று பரவாயில்லை என்று கருதலாம்.இந்த அவையில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
பல்வேறு பிரச்சினைகளை காங்கிரஸ் எழுப்பியதால்அமளி ஏற்பட்டபோதிலும் விலைவாசி உயர்வு, வெள்ளம், வறட்சி நிலவரம் ஆகிய பிரச்சினைகள் தொடர்பாக சிறப்பாக விவாதம் நடைபெற்றது.
மாநிலங்களவையில் 9 மசோதாக்கள் நிறைவேறின. ஆனால் சரக்கு சேவை வரி மசோதா மீதான எதிர்ப்பில் காங்கிரஸ் விடாப்பிடியாக இருந்ததால் கிடப்பில் உள்ள அந்த மசோதா நிறைவேறவில்லை.
அதே சமயம் சிறார் நீதி மசோதா விவகாரத்தில் இடதுசாரி கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் ஒன்றுபட்டதால் மாநிலங்iகளவையில் அந்த மசோதா நிறைவேறியது.
சுமித்ரா நம்பிக்கை
கடந்த கூட்டத் தொடரின் போது காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், இந்த கூட்டத் தொடரில் அத்தகைய நடவடிக்கைகளில் சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் ஈடுபடவில்லை. கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த குளிர் கால கூட்டத் தொடர் நேற்று டன் முடிவடைந்ததை அடுத்து உறுப்பினர்களிடம் உரையாற் றிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘‘புத்தாண்டு புதிய நம்பிக்கை யையும், புத்தாற்றலையும் நமக்கு அளிக்கும் என நம்புகிறேன். வரும் ஆண்டுகளில் நாடாளுமன்றம் செயல்பட அனைவரும் ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
மேலும் தேதி குறிப்பிடாமல் காலவரையின்றி மக்களவை ஒத்திவைக்கப் படுவதாக சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் அறிவித்தார். இதேபோல் மாநிலங்களவையும் ஒத்திவைக் கப்பட்டது.