

மார்க்சிஸ்ட் கட்சியின் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரஸி’ இதழில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
அயோத்தி விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள் ளது. பாபர் மசூதி இருந்த இடத் தில் எவ்வித பணிகளும் நடை பெறக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு நீண்டகாலமாக நடை முறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக கற்கள் சேகரிக்கப்படுவதை, நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவே பார்க்க வேண்டும். மாவட்ட அதிகாரி களை விழிப்புடன் இருக்குமாறு உத்தரப்பிரதேச முதல்வர் அறி வுறுத்தியுள்ளார். ஆனால் இது போதாது. அயோத்தியில் கற்கள் இறக்குவது போன்ற எந்தவொரு செயலையும் தடுத்து நிறுத்தும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த இதழில் கூறப்பட்டுள்ளது.