Last Updated : 31 Dec, 2015 06:47 PM

 

Published : 31 Dec 2015 06:47 PM
Last Updated : 31 Dec 2015 06:47 PM

விராட் கோலி கூறியதை வைத்து ஜேட்லியை நெருக்குகிறது ஆம் ஆத்மி

டிசம்பர் 18-ம் தேதி விராட் கோலி பத்திரிகை பேட்டி ஒன்றில் டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு பற்றி குறிப்பிட்டதை வைத்து அருண் ஜேட்லியை குறிவைத்துள்ளது ஆம் ஆத்மி.

அதாவது அந்த டிசம்பர் 18 பத்திரிகை பேட்டியில் விராட் கோலி தன்னை அண்டர்-14 அணியில் தேர்வு செய்ய சில சாதகங்களை டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகம் கேட்டதாகவும், தனது தந்தை அதனை நிராகரித்ததாகவும் குறிப்பிட்டு பிறகு தன் திறமையினால் அணிக்குள் நுழைந்ததாகத் தெரிவித்திருந்தார்.

இந்த பத்திரிகை பேட்டியை குறிப்பிட்டு ஆம் ஆத்மி கட்சியின் அசுடோஷ் கூறும்போது, “நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் (பொறுப்பு) சேத்தன் சவுகான், டெல்லி கிரிக்கெட் சங்கம் விராட் கோலி போன்ற வீரர்களை உருவாக்கியுள்ளது என்றும் விராட் கோலி அருண் ஜேட்லியை பாராட்டினார் என்றும் கூறினார்.

ஆனால், டிசம்பர் 18-ம் தேதி தேசியப் பத்திரிகை ஒன்றிற்கு விராட் கோலி கூறும்போது, அண்டர்-14 அணியில் நுழைய தங்களிடம் சில சலுகைகள் எதிர்பார்க்கப்பட்டது என்றும் அதனை தன் தந்தை நிராகரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அருண் ஜேட்லி டிடிசிஏ-வின் தலைவர். எனவே அணித்தேர்வில் முறைகேடுகள் இருப்பது என்பதை இவரது கூற்று பிரதிபலிக்கிறது” என்றார்.

நேற்று, டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு ஒன்றின் மீதான விசாரணையை டெல்லி போலீஸ் முடித்து கொள்வது நலம் என்று ஜேட்லி கடிதம் ஒன்றில் அறிவுறுத்தியதாக ஆம் ஆத்மி தெரிவித்ததையடுத்து இன்று விராட் கோலியின் டிசம்பர் 18 பேட்டியைக் குறிப்பிட்டு அருண் ஜேட்லியை மேலும் நெருக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x