Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

இந்தியாவில் இதுவரை 23.8 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை

கரோனா தொற்றை தடுக்க நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, செவ்வாய்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மக்களுக்கு 23 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரத்து 635 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 9 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரத்து 552 சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 6 கோடியே 8 லட்சத்து 91 ஆயிரத்து 662 பேர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்களுக்கு 16 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரத்து 521 முதல் டோஸ்களும் 8 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 071 இரண்டாவது டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.

45 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் 7 கோடியே 25 லட்சத்து 46,725 பேருக்கு முதல் டோஸ், 1 கோடியே 15 லட்சத்து 34 ஆயிரத்து 478 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 6 கோடியே 12 லட்சத்து 75 ஆயிரத்து 505 பேருக்கு முதல் டோஸும், 1 கோடியே 94 லட்சத்து 36 ஆயிரத்து 78 பேருக்கு இரண்டாவது டோஸும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x