Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

மத்திய பிரதேசத்தில் பயிரிடப்படும் 3 கிலோ எடை கொண்ட நூர்ஜகான் மாம்பழத்தின் விலை ரூ.1,000

மரத்தில் நூர்ஜகான் மாங்காய்.

அலிராஜ்பூர்

மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் நூர்ஜகான் மாம்பழம் இந்த ஆண்டு நல்ல விலைக்குப் போகிறது. இதன் ஒன்றின் விலை ரூ.500 முதல் 1,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மத்திய பிரதேசத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தில், குஜராத் எல்லைக்கு அருகில் உள்ளது கத்திவாடா பகுதி. இந்தூரில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் இருக்கும் இப்பகுதியில் நூர்ஜகான் என்ற மாம்பழம் விளைகிறது. ஆப்கானிய வம்சாவளியை சேர்ந்த இந்த மாம்பழங்கள் இப்பகுதியில் மட்டுமே விளைவிக்கப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதி மா விவசாயிகளில் ஒருவரான சிவராஜ் சிங் ஜாதவ் கூறும்போது, “எனது தோட்டத்தில் 3 நூர்ஜகான் மா மரங்கள் உள்ளன. இவை சுமார் 250 காய்கள் வரை காய்த்துள்ளன. இதன் பழம் ஒன்றின் விலை ரூ.500 முதல் ரூ.1,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. ம.பி. மட்டுமின்றி அண்டை மாநிலத்தில் உள்ள மாம்பழப் பிரியர்களும் இவற்றை முன்பதிவு செய்துள்ளனர். இம்முறை நூர்ஜகான் மாங்காயின் எடை 2 கிலோ முதல் 3.5 கிலோ வரை இருக்கும் என நம்புகிறோம்” என்றார்.

நூர்ஜகான் மாங்காய் விளைவிப்பதில் நிபுணரான இஷாக் மன்சூரி கூறும்போது, “சாதகமானபருவநிலை காரணமாக இந்தஆண்டு இதன் மகசூல் நன்றாகஉள்ளது. என்றாலும் கரோனா பரவலால் வியாபாரம் பாதித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு சாதகமற்ற காலநிலை காரணமாக நூர்ஜகான் மா மரங்கள் சரிவர பூக்கவில்லை. 2019-ல் இந்த மாம்பழத்தின் எடை சராசரியாக 2.75 கிலோ இருந்தது. ஒரு மாம்பழத்தின் அதிகபட்ச விலை1,200 ஆக இருந்தது” என்றார்.

நூர்ஜகான் ரக மா மரங்கள் ஜனவரி – பிப்ரவரியில் பூக்கின் றன. இதன் பழங்கள் ஜூனில் விற்பனைக்கு வருகின்றன. நூர்ஜகான் மாங்காய் ஓர் அடி வரை வளரக்கூடியது. இதன் மாங்கொட்டைகள் 150 முதல் 200 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும் என இப்பகுதி விவ சாயிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x