Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 27 பேர் உயிரிழப்பு: சூறைக் காற்றில் விமானம் குலுங்கியதில் 8 பேர் காயம்

கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் சூறைக் காற்றில் சிக்கிய விமானம் குலுங்கியதில் 8 பயணி கள் காயமடைந்தனர்.

மேற்கு வங்கத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலையில் இருந்து இடி, மின் னலுடன் பலத்த மழை பெய்தது. முக்கியமாக மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதியில் இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் இடியுடன் மின்னல் அடுத்தடுத்து தாக்கியதில் சில வீடுகள் சேதமடைந்தன. சில இடங்களில் இடி விழுந்ததில் மரங்கள் கருகின.

ஒரே நாளில் பல்வேறு இடங் களில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் நேற்றுமுன்தினம் 27 பேர் உயிரிழந் தனர். மூர்ஷிதாபாத்தில் 10 பேர் இறந்தனர், ஹூக்ளியில் 11 பேர் இறந்தனர். மேற்கு மிட்னாப்பூர் பகுதியில் 3 பேரும், பங்குரா பகுதியில் 2 பேரும் நைடாவில் ஒருவரும் உயிரிழந்தனர். இறந் தவர்களில் 3 பேர் பெண்கள். மேலும் சில இடங்களில் மரங்கள் விழுந்ததில் பலர் காயம் அடைந்துள் ளனர். மின்னல் தாக்கி இறந்தவர் களில் பெரும்பாலானோர் விவசாயி கள் என்றும், வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின் னல் தாக்கியதில் இறந்துள்ளதாக வும் மேற்கு வங்க பேரிடர் நிர்வாகத்துறை அமைச்சர் ஜாவேத் அகமது கான் தெரிவித்தார்.

பிரதமர் நிவாரணம்

மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதியும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறி வித்துள்ளார். மாநில அரசு சார் பிலும் இறந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் குலுங்கியது

மேற்குவங்கத்தில் நேற்று முன் தினம் பலத்த மழையுடன் கடும் சூறைக்காற்றும் வீசியது. அப் போது மும்பையில் இருந்து கொல் கத்தாவுக்கு வந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று கடும் சூறைக் காற்றில் சிக்கியது. இதில் விமானம் மேலும் கீழுமாக குலுங் கியது. இதில் விமானத்தில் இருந்த பயணிகள் தங்கள் இருக்கைகளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் 8 பயணிகள் காயமடைந்தனர். விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர், விமா னம் கொல்கத்தா விமான நிலை யத்தில் பத்திரமாக தரையிறக் கப்பட்டு பயணிகள் அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பினர்.

காயமடைந்த 8 பயணிகளில் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டதாகவும், அவர்களில் 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலை யில், ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்றுவருதாகவும், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்றும் கொல்கத்தா விமான நிலைய இயக்குநர் சி.பட்டாபி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x