Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM

வருமான வரி தாக்கலுக்கு புதிய இணையதளம்: மத்திய நிதி அமைச்சகம் அறிமுகம்

வருமான வரித் துறை ஆன்லைன் மூலமாக வருமான வரி ரிட்டர்ன்படிவத்தை தாக்கல் செய்வதற்கு புதிய தளத்தை நேற்று அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே இருந்த தளத்தில் உள்ள அம்சங்களை விட இதில் பல மேம்பட்ட சிறம்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக கலந்துரையாடும் வசதி இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரி படிவம் தாக்கல் செய்வோருக்கு உதவுவதற்காக வரிசெலுத்துவோர் உதவி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை இ-ஃபைலிங் முறைக்கு இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளது. www.incometax.gov.in என்ற இந்த இணையதளம் வரி செலுத்துவோரின் வசதிக்காக பல்வேறு சிறம்பம்சங்களைக் கொண்டுள்ளதாக நிதிஅமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஆன்லைன் படிவ முறைக்கான தளத்தில் இருந்த ஹைபர்லிங் அதாவது http:// போன்ற அம்சங்கள் இதில் கிடையாது.

வருமான வரி படிவம் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு வரி செலுத்துவோருக்கு உடனடியாக ரிட்டர்ன் தொகை (ரீபண்ட்) கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

வரி படிவம் குறித்த தொடர் நடவடிக்கைகள், வரித்துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல், பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒரே பக்கத்தில் இருக்கும்.

வருமான வரி ரிட்டன் (ஐடிஆர்)தாக்கல் செய்வது தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் கலந்துரையாடலுக்கான இலவச சாஃப்ட்வேர் இப்போது வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 2 பிரிவினர் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலமாக தாக்கல் செய்யலாம். ஐடிஆர் 3,5,6,7 ஆகிய பிரிவினருக்கு இத்தகைய வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.

வரி செலுத்துவோர் தங்களைப் பற்றிய விவரங்களை தாமாக முன்வந்து தாக்கல் செய்யலாம். குறிப்பாக வருமானம், வீடு சொத்து, வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் பெறப்படும் வருமானங்கள் குறித்த விவரங்களை ஐடிஆரில் பதிவு செய்யலாம்.

வரி படிவம் தாக்கல் செய்வதற்கு முந்தைய விவரங்களை பூர்த்தி செய்தல், வருமானம், வட்டி மூலமான வருமானம், டிவிடெண்ட், மூலதன ஆதாயம் மற்றும் வரி பிடித்தலுக்கான ஆதாரம் உள்ளிட்ட விவரங்களை ஜூன் 30,2021-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

வரி செலுத்துவோரின் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கவசதியாக அழைப்பு மையங்கள்(கால் சென்டர்) ஏற்படுத்தப்பட் டுள்ளது. ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யும் செயலி (ஆப்) இம்மாதம் ஜூன் 18 முதல் செயல்படும்.

ஆன்லைன் மூலமாக வரிசெலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணைய வங்கி, யுபிஐ,கிரெடிட் கார்டு, நிஃப்ட் மூலம் எளிதாக வரி செலுத்தும் வசதியும்செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x