‘கரோனா 2-ம் அலை வேளாண் துறையை பாதிக்காது’

‘கரோனா 2-ம் அலை வேளாண் துறையை பாதிக்காது’
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்றின் 2-ம் அலை வேளாண் துறையில்பாதிப்பை ஏற்படுத்தாது என்றுநிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தீவிரமெடுக்கத் தொடங்கிய கரோனா 2-ம் அலையைக் கட்டுப்படுத்த, கடந்த ஏப்ரல் மாதம் முதலாக பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதனால் பல துறைகள் முடக்கத்தைச் சந்தித்துள்ளன.

இந்நிலையில், நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ்சாந்த் கூறும்போது, "பொதுவாக வேளாண் துறை சார்ந்த செயல்பாடுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதி வரையில் தீவிரமாக நடைபெறும். அதன் பிறகு படிப்படியாக குறையத் தொடங்கி, பருவமழையை ஒட்டி மீண்டும்அதிகரிக்கும்.

மே முதல் ஜூன்நடுப்பகுதி வரை குறைவானஅளவிலேயே வேளாண்செயல்பாடுகள் நடைபெறும்.

எனவே, தற்போது கிராமப்புறங்களில் கரோனா 2-ம்அலை தீவிரமடைந்தாலும், அது வேளாண் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தாது’ என்றார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in