

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு புளூ டிக் வசதி வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் உட்பட பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் புளூ டிக் வசதியை ட்விட்டர் நிர்வாகம் அண்மையில் நீக்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் மீண்டும் புளூ டிக் வசதி வழங்கப்பட்டது.
"கடந்த 6 மாதங்களில் ஒருமுறை கூட ட்விட்டர் கணக்கை பயன்படுத்தாத பிரபலங்களின் புளூ டிக் கணக்கு மட்டுமே நீக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்களுக்கு மீண்டும் அந்த வசதி வழங்கப்பட்டு விட்டது" என்றும் ட்விட்டர் கூறியது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், "மோடி அரசு புளூ டிக் வசதிக்காக போராடுகிறது. உங்களுக்கு தடுப்பூசி தேவை என்றால், சுயமாக ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி அரசு மருத்துவ மனையில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த செவிலியர்கள், மலையாளத்தில் பேச கூடாது என்று மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அந்த உத்தரவை மருத்துவமனை நிர்வாகம் வாபஸ் பெற்றது.
இதுகுறித்து கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய மொழிகளில் மலையாளமும் ஒன்று. மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள்" என்று கண்டித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், ‘‘கரோனா காலத்தில் மலையாள செவிலியர் கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றி வருகின்றனர். அவர்களை அவமதிக்கும் வகை யில் உத்தரவு வெளியிடப்பட் டிருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.