கள்ளச் சாராயத்துக்கு 100 பேர் உயிரிழப்பு: பாஜக பிரமுகர் கைது

கள்ளச் சாராயத்துக்கு 100 பேர் உயிரிழப்பு: பாஜக பிரமுகர் கைது
Updated on
1 min read

உ.பி. மாநிலம் அலிகாரில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த 2 வாரங்களில் 100-க்கும் அதிக மானோர் இறந்துள்ளனர். கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 61 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பாஜகவைச் சேர்ந்த ரிஷி சர்மா என்பவர் தலைமறைவானார். அவரைபற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உ.பி.யின் புலந்த்சாகர் மாவட்ட எல்லையில் ரிஷி சர்மாவை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரது மனைவி, மகன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in