

மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் மாவட்டம் கேஷ்பூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் மகிஷ்டா என்ற பகுதியில், ‘‘பாஜக நிர்வாகிகளை மக்கள் புறக் கணிக்க வேண்டும். கடைகளில் அவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய கூடாது. டீக்கடைகளில் டீ கூட கொடுக்கக் கூடாது. மீறினால் கடும் அபரா தம் விதிக்கப்படும்’’ என்று சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டிகளை உள்ளூர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியதாக கூறப் படுகிறது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேஷ்பூரில் அந்த குறிப்பிட்ட பகுதியில் சமீபத்திய தேர்தலில் பாஜக அதிக வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாஜக நிர்வாகிகளுக்கு எதிரான சுவரொட்டிகள் அதிர்ச்சி அளிப்ப தாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டர் பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.