உ.பி.யில் தடுப்பூசிகளை செலுத்த மறுத்த கிராமவாசிகள்: முஸ்லிம் இமாம்கள் விழிப்புணர்வு அறிவிப்பிற்கு பலன்

உ.பி.யில் தடுப்பூசிகளை செலுத்த மறுத்த கிராமவாசிகள்: முஸ்லிம் இமாம்கள் விழிப்புணர்வு அறிவிப்பிற்கு பலன்
Updated on
2 min read

உத்தரப்பிரதேசத்தில் கரோவிற்கானத் தடுப்பூசிகளை செலுத்த சில கிராமவாசிகள் மறுத்து வருகின்றனர். இவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முஸ்லிம் இமாம்கள் அளிக்கும் அறிவிப்பிற்கு பலன் கிடைத்துள்ளது.

இம்மாநிலத்தின் மேற்கு பகுதியிலுள்ள மதுரா, அலிகர் மற்றும் எட்டாவா உள்ளிட்ட சில கிராமங்களை சேர்ந்தவர்கள் தடுப்பூசிகள் செலுத்தின் கொள்ள மறுத்து வருகின்றனர். இதற்கு அவர்கள் இடையே இருந்த அச்சம் காரணமாக இருந்தது.

கடந்த வாரம் மதுராவின் நயிபஸ்தி எனும் கிராமத்திற்கு அனுப்பப்பட்ட 1500 தடுப்பூசிகளில் 20 மட்டுமே செலுத்திக் கொண்டனர். இதுபோல், உ.பி.யின் பல கிராமவாசிகள் திடீர் என தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அக்கிராமங்களின் மாவட்ட நிர்வாகங்கள் முஸ்லிம் இமாம்களை தம் மசூதிகளின் ஒலிபெருக்கிகளில் அறிவிப்பு அளித்து விழிப்புணர்விற்கு ஏற்பாடு செய்தனர். வழக்கமாக முஸ்லிம்களுக்கான ஐந்துவேளை தொழுகைக்கான அழைப்பு விடுக்க இந்த ஒலிபெருக்கிகள் பயன்படுகின்றன.

இவை, முதன்முறையாக அப்ப்பகுதியில் வாழும் முஸ்லிம் அல்லாதோருக்கும் பலன் அளித்துள்ளது. இதில், மவுலானாக்கள் அளித்த தடுப்பூசி விழிப்புணர்வால் பொதுமக்கள் அதை செலுத்திக்கொள்ள முன்வரத் துவங்கி உள்ளனர்.

மதுராவின் ராயா கிராமத்தில் முஸ்லிம்கள் 60 மற்றும் இந்துக்கள் 40 சதவிகிதத்தில் வாழ்கின்றனர். இங்குள்ள மசூதியின் தொழுகையை தலைமை ஏற்று நடத்தும் மவுலானாக்களுக்கு இரண்டு சமூகத்தினரிலும் நற்மதிப்பு நிலவுகிறது.

இதுகுறித்து மதுராவின் ராயா கிராமத்து மசூதியில் மவுலானாவான ரஹீம் குரைஷி கூறும்போது, ‘‘அருகிலுள்ள

கிராமத்துவாசிகளில் 3 பேருக்கு தடுப்பூசி செலுத்திய ஒரு வாரத்திற்கு பின் பலியானதாக தகவல் பரவி இருந்தது.

இதனால் இந்து, முஸ்லிம் என அனைவரும் தடுப்பூசிக்கு மறுத்து விட்டனர். எனக்கு துவக்கத்தில் அறிவிப்பு அளிக்க அச்சமாக இருந்தது. ஏனெனில், இதுபோன்ற விவகாரங்களில் சிலசமயம் பொதுமக்கள் கோபப்படுவது உண்டு.

பலியான மூவரும் வேறு காரணங்களால் இறந்ததாக எடுத்து கூறியது பலன் அளித்துள்ளது. தற்போது 80 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.’’ எனத் தெரிவித்தார்.

இதே கிராமத்தின் மற்றொரு மசூதியின் இமாமான ஹாபிஸ் இஸ்லாம் கான் கூறுகையில், ‘‘எனது பதவியை தவறாகப் பயன்படுத்துகிறார்களோ என துவக்கத்தில் சந்தேகம் கொண்டேன். பிறகு பொதுமக்கள் தடுப்பூசிகளுக்காக தங்கள் வீடுகளை கும்பல், கும்பலாக வெளியில் வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.’’ எனத் தெரிவித்தார்.

உ.பி.யின் கிழக்குப் பகுதியின் பாரபங்கியின் ஒரு கிராமத்திற்கு மருத்துவப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்த சென்றிருந்தனர். அப்போது, இதற்கு மறுத்த சில இளைஞர்கள், அருகிலுள்ள நதியில் குதித்து தப்பி விட்டனர்.

மசூதி ஆக்கிரமிக்கப்பட்டதாக இடிக்கப்பட்டது. இதன் தாக்கமாகவும் அப்பகுதியின் சில கிராமவாசிகள் தடுப்பூசி செலுத்த அஞ்சியுள்ளனர்.

இதன் மீது அப்பகுதியின் துணை ஆட்சியரான ராஜீவ் சுக்லா கூறும்போது, ‘‘தடுப்பூசிக்கு அஞ்சி நதியில் குதித்தவர்கள் விரைவில் கரோனாவின் ஆபத்தை உணர்ந்து மீண்டும் திரும்பி வருவார்கள். இதுவரையும் இப்பகுதியின் 14 கிராமங்களில் தடுப்பூசி செலுத்தியாகி விட்டது.’ எனத் தெரிவித்தார்.

சுமார் 20 வருடங்களுக்கு முன் உ.பி.யின் முஸ்லிம் கிராமவாசிகள் இடையே அம்மை தடுப்பூசிக்கு எதிராக இதுபோன்ற அச்சம் நிலவியது. தற்போது இந்துக்கள் இடையேயும் கரோனா தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்கள் பரவுகின்றன.

இதன் பின்னணியில் சமூகவலைதளங்களில் பரவும் தவறானச் செய்திகளே காரணமாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம்

பாஜக ஆளும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசிற்கு பெரும் சவாலாக அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in