

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளதாவது:
மேற்கு மத்தியப் பிரதேசம், மேற்கு உத்திரப் பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் உள்ள சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மற்றும் பலத்த காற்று வீசும்.
குஜராத், கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மின்னல் மற்றும் பலத்த காற்று (மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில்) வீசும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளால மாஹே, லட்சத்தீவுகளின் சில இடங்களில் மின்னல் ஏற்படக்கூடும்.
கடலோர கர்நாடகாவில் சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, உட்புற கர்நாடகா, ராயலசீமா, லட்சத்தீவுகள், கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, குஜராத், துணை இமயமலை மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா மற்றும் நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், திரிபுராவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.