

நாட்டில் 17.2 கோடி பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் 16.9 கோடியை விட அதிகம் என மத்திய அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் நேற்று கூறும்போது, “கரோனா தடுப்பூசியை குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவை நாம் முந்தியுள்ளோம். நாட்டில் 17.2 கோடி பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் 16.9 கோடியை விட அதிகமாகும். தடுப்பூசி செலுத்தும் பணியை நாங்கள் சீராக மேம்படுத்தியும் தீவிரப்படுத்தியும் வருகிறோம். வரும் காலங்களில் இப்பணி இன்னும் தீவிரம் அடையும்” என்றார்.