

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா வில் மத்திய அமைச்சரின் வீட்டுக்கு அருகில் நேற்று நடந்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கத்தரியா, ஆக்ரா மக்கள வைத் தொகுதி எம்.பி. ஆவார். ஆக்ராவில் ஆக்ரா பல்கலைக் கழகம் அருகில் இவரது அரசு வீடு உள்ளது. இந்நிலையில் அமைச்சர் நேற்று தனது வீட்டிலிருந்து காரில் ஏறும்போது, அருகில் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி யால் சுடும் சப்தம் கேட்டது. பாஜக மாணவர் அணி (ஏபிவிபி) உறுப் பினரை நோக்கி மீது காங்கிரஸ் மாணவர் அணியை (என்எஸ்யூஐ) சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் உட்பட என்எஸ்யூஐ அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மாணவர் சங்க தேர்தலின் போது, துர்கேஷ் தாக்கூர் மற்றும் என்எஸ்யூஐ தலைவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாக வும் இதற்கு முன் இரு அணியின ரும் மோதிக்கொண்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.