கரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நேற்று பிரதமர் மோடி கலந்துரையாடினார்.படம்: பிடிஐ
இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நேற்று பிரதமர் மோடி கலந்துரையாடினார்.படம்: பிடிஐ
Updated on
1 min read

இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) விஞ்ஞானிகளுடன் காணொலி வாயிலாக நேற்று பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: கரோனா வைரஸ் தொற்று காலத்தில், ஒராண்டில் தடுப்பூசி கிடைப்பதை இந்திய விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். இந்த தொற்றுக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்துக்கும் இந்திய விஞ்ஞானிகள் பங் களிப்பு அளித்துள்ளனர். இந்தியா தன்னிறைவு பெறு வதில், விஞ்ஞானிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

கரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுக்கள். அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெறு வதையே தேசம் விரும்புகிறது. தன்னிறைவு இந்தியா என்ற கனவை நனவாக்க, நாம் உறுதி பூண்டுள்ளோம். ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகளை நமது விஞ்ஞானிகள் முனைப்புடன் உள்ளனர் எதிர்காலத்திற்கு வழிகாட்டிய விஞ்ஞானிகள், அதனை நோக்கி வெளிச்சத்தை பாய்ச்சி உள்ளனர்.

சுய சார்பு இந்தியா மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பல்வேறு துறைகளில் இந்தியா சுய சார்பு இந்தியாவாக உருவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வேளாண், வானியல், பேரிடர் நிர்வாகம், பாதுகாப்புத் துறை, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாம் தன்னிறைவு அடையவேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in