Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

2024 ஆண்டு வரை போராட்டம் தொடரும் : ராகேஷ் டிகைத் உறுதி

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 6 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் முக்கிய விவசாய சங்கமான பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகைத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜக ஆட்சி முடிந்து 2024-ம் ஆண்டு தேர்தல் வரும்போது புதிய வேளாண் சட்டங்கள் நிச்சயம் இருக்காது. இந்த சட்டங்களை வாபஸ் பெற பாஜக ஒப்புக் கொள்ளும். இன்னும் 3 ஆண்டுகளில் இந்த சட்டம் இருக்காது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்து போராடுவோம். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்வரை விவசாயிகள் போராட்டம் டெல்லியில் தொடரும். இவ்வாறு ராகேஷ் டிகைத் கூறினார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x