

ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாதின் மகனும் பிஹார் மாநில சுகாதாரத்துறை மற்றும் வனத் துறை அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் அரை கி.மீ., தொலைவுக்கு குதிரை சவாரி செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக பெற்றோ ரின் வீட்டில் இருந்து அரசு பங்களாவுக்கு நேற்று முன் தினம் அவர் குதிரையில் சென்றார். அரை கி.மீ. துார பயணத்துக்காக அவருடன் ஏராளமான பாதுகாப்பு படையினர் சென்றனர். தேஜ் பிரதாப்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதே சமயம் குதிரை சவாரி செய்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என தேஜ் பிரதாப் நியாயப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மருத்துவ மனைகளில் மருந்து உட்பட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் நோயாளிகள் தவித்து வரும் நிலை யில், சுகாதாரத் துறை அமைச்சரான தேஜ் பிரதாப் உற்சாகமாக குதிரை சவாரி செய்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாஜக தலைவர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.