தென் மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென் மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Updated on
1 min read

கேரளாவின் தெற்குப் பகுதிகளில் இன்று (ஜூன் 3) தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் மேற்குப் பருவ மழையால் ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். இதனால் நாட்டுக்கு அதிகமான மழைப் பொழிவைக் கொடுக்கும் மழையாக இந்தப் பருவ மழை கருதப்படுகிறது.

தென்மேற்குப் பருவ மழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. தென்மேற்குப் பருவ மழை சீராக இருப்பதே விவசாயத் துறை செழிக்கவும் ஆதாரமாக இருக்கிறது.

கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம்தேதி தொடங்கும் பருவ மழை ஒருநாள் முன்கூட்டியே ஜூன் 31-ம் தேதி தொடங்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. யாஸ் புயல் உதவியால் அரபிக்கடல் பகுதிக்குப் பருவ மழையை இழுத்துள்ளது.

இந்நிலையில் கேரளாவின் தெற்குப் பகுதிகளில் இன்று (ஜூன் 3) தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in