மத்திய அமைச்சர் பிரதாப் ரூடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: சபாநாயகர் பரிசீலனை

மத்திய அமைச்சர் பிரதாப் ரூடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: சபாநாயகர் பரிசீலனை
Updated on
1 min read

மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் பரிசீலனையில் இருப்ப தாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் முன்னாள் முதல்வர் சங்கரின் சிலை திறப்பு விழா அண்மையில் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி யில் பங்கேற்கும்படி தனக்கு அழைப்பு விடுக்காத காரணத்தி னால் பங்கேற்கவில்லை என்று பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் உம்மண் சாண்டி விளக்கம் அளித்து கடிதம் எழுதியிருந்தார்.

இந்த சூழலில் மக்களவையில் இந்த விவகாரம் குறித்து அண்மை யில் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, ‘‘வேறு சில முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருந்ததால், பிரதமர் பங்கேற்ற சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என உம்மண் சாண்டி விளக்கம் அளித் துள்ளார் என தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் இந்த தவறான தகவலை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் எம்.பி வேணுகோபால் அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்தார். மக்களவை நேற்று கூடியதும் பூஜ்ய நேரத்தில் இது குறித்து வேணுகோபால் நேற்று கேள்வி எழுப்பினார். அப்போது அந்த நோட்டீஸ் பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in