

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் வெட்டி, கடத்த தயாராக வைத் திருந்த ரூ. 2 கோடி செம்மரங்களை வனத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
திருப்பதி அடுத்துள்ள சந்திரகிரி மண்டலம் சேஷாசலம் வனப் பகுதியில் காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் பொம்மாஜி கொண்டா எனும் இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காவலர்களைக் கண்டதும் செம்மரம் வெட்டும் கூலி தொழிலாளர்கள் செம்மரங்களை போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அங்கு இருந்த ரூ. 2 கோடி செம்மரங்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய செம்மர கூலி தொழிலாளர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.