Published : 02 Jun 2021 01:42 PM
Last Updated : 02 Jun 2021 01:42 PM

கரோனா பரவல் எதிரொலி; மத்திய அரசு ஊழியர்களுக்கு வருகைப்பதிவு கட்டுப்பாடு தளர்வு: ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிப்பு

தற்போதைய கோவிட் நிலைமையை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வருகைப்பதிவு கட்டுப்பாடுகள் தளர்வு ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அதிகாரிகளின் கூட்டத்திற்கு தலைமை வகித்த பணியாளர், ஓய்வூதிய துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பின்னர்தற்போதைய கோவிட் நிலைமையை கருத்தில் கொண்டு நெகிழ்வு வருகைப்பதிவு முறை ஜூன் 15 வரை மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு நெகிழ்வு வருகைப்பதிவு முறை வசதி ஏற்கெனவே அமலில் உள்ளது. 50 சதவீத வருகைப்பதிவுடன் செயல்பட மத்திய அரசு அலுவலகங்கள் பணிக்கப்பட்டன.

அதன்படி பின்வருமாறு வருகைப்பதிவை பராமரிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

(அ) அலுவலகத்தில் கோவிட் பாதிப்புகள் மற்றும் செயல்பாட்டு தேவையை கருத்தில் கொண்டு, பணியாளர்களின் வருகையை அனைத்து மட்டங்களிலும் அமைச்சகங்கள், துறைகளின் செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்கள் ஒழுங்குப்படுத்த வேண்டும்.

(ஆ) மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

(இ) அலுவலகங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வரையில் வெவ்வேறு நேரங்களில் பணியாளர்கள் வர வேண்டும்.

(ஈ) கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் மற்றும் தொலைபேசி மற்றும் இதர மின்னணு தொடர்பு முறையின் மூலம் தொடர்பில் இருக்க வேண்டும்.

(உ) அலுவலகம் வரும் பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சரியான கோவிட் நடத்தைமுறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பது புதிய உத்தரவின் முக்கிய அம்சங்களாகும்.

மேற்கண்ட விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும், அதே சமயம், அலுவலக பணி எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாதென்றும் அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து பணியாளர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x