

பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்த முன்னாள் இந்திய விமானப்படை ஊழியர் ஒருவரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இதன் மூலம் இந்தியாவுக்குள் தங்களது உளவு வலைப்பின்னலை உருவாக்கும் முயற்சியை தகர்த்திருப்பதாக டெல்லி குற்றவியல் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த ரஞ்ஜீத் என்ற இந்த முன்னாள் விமானப்படை ஊழியர் பாத்திந்தாவில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அதாவது இந்திய எல்லைப்புறங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்களை இவர் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு வழங்கியுள்ளார்.
முன்னதாக இதே போல் தகர்க்கப்பட்ட ஒரு முயற்சியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த கஃபைதுல்லா கான் என்கிற மாஸ்டர் ராஜா, மற்றும் அப்துல் ரஷீத் ஆகியோரும் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் வைபர் மூலம் உளவுத்தகவல்களை அனுப்பியுள்ளதாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.