Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

கரோனா பிரச்சினையை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டதாக 63% பேர் ஆதரவு

புதுடெல்லி

கரோனா பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக கையாண்டதாக 63 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி 2-வது முறையாக பதவி யேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந் துள்ளது. இதுதொடர்பாக ஏபிபி தொலைக்காட்சி, சி-வோட்டர் இணைந்து மக்களிடையே கருத் துக் கணிப்பு நடத்தின.

கடந்த ஜனவரி முதல் மே வரை நாடு முழுவதும் மக்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன. அப்போது மக்களிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கு அவர்கள் அளித்த ஆதரவு குறித்த புள்ளிவிவரங்களை ஏபிபி- சி-வோட்டர் வெளி யிட்டிருக்கிறது.

கரோனா வைரஸ் பரவியபோது 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தது சரியா, தவறா என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

நகரப் பகுதிகளை சேர்ந்த 34 சத வீதம் பேர் பிரதமர் மோடி பிரச் சாரம் செய்தது சரி என்றும் 58 சத வீதம் பேர் தவறு என்றும் கருத்து தெரிவித்தனர். கிராமங்களில் 29 சத வீதம் ஆதரவையும் 61 சதவீதம் பேர் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளி வைத்திருக்கலாம் என்று 60 சதவீதம் பேர் கூறினர்.

உத்தராகண்ட் மாநிலம், ஹரித் வாரில் பக்தர்கள் இன்றி கும்ப மேளாவை நடத்தியிருக்கலாமா என்ற கேள்விக்கு நகரப் பகுதிகளில் 58 சதவீதம் பேரும் கிராமங்களில் 54 சதவீதம் பேரும் அவ்வாறு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்தனர். நகரங்களில் 20 சதவீதம் பேரும், கிராமங்களில் 23 சதவீதம் பேரும் கும்பமேளாவில் பக்தர்கள் பங்கேற்பது அவசியம் என்று வலியுறுத்தினர்.

நரேந்திர மோடி அல்லது காங் கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால் கரோனா பிரச்சினையை யார் சிறப்பாக கையாண்டிருப்பார்கள் என்று கேட்கப்பட்டது.

கரோனா பிரச்சினையை பிர தமர் நரேந்திர மோடி சிறப்பாக கையாண்டதாக நகரவாசிகளில் 66 சதவீதம் பேரும் கிராமவாசிகளில் 62 சதவீதம் பேரும் தங்களது கருத்தை பதிவு செய்தனர். சராசரியாக 63 சதவீதம் பேர் பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதேநேரம் நகர பகுதிகளில் ராகுலுக்கு 14 சதவீதம் பேரும் கிராமங்களில் 15 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு அளித்தனர்.

கரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியது குறித்த கேள்விக்கு, இது தவறான நடவடிக்கை என்று நகரவாசிகள் 54 சதவீதம் பேரும் கிராமவாசிகள் 45 சதவீதம் பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் 29 சதவீத நகரவாசிகளும் 37 சதவீத கிராமவாசிகளும் அதற்கு ஆதரவு அளித்தனர்.

புதிய நாடாளுமன்ற வளாகம் இப்போது கட்டலாமா என்ற கேள்விக்கு 44 சதவீதம் பேர் எதிர்ப்பை பதிவு செய்தனர். 33 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.

தற்போதைய மிகப்பெரிய பிரச்சினை எது என்ற கேள்விக்கு 36 சதவீதம் பேர் கரோனா என்று பதிலளித்தனர். 18 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்மை என்றும், 10 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு என்றும், 7 சதவீதம் பேர் ஊழல் என்றும், 5 சதவீதம் பேர் வறுமை என்றும் பதில் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x