பிஎஃப் கணக்கில் இருந்து மீண்டும் முன்பணம் எடுக்க அனுமதி

பிஎஃப் கணக்கில் இருந்து மீண்டும் முன்பணம் எடுக்க அனுமதி
Updated on
2 min read

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) இருந்து முன்பணம் எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய தொழி லாளர், வேலைவாய்ப்புத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா முதல் அலையின்போது 'பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா' திட்டத்தின் ஒரு பகுதியாக வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கும் சிறப்புத் திட்டம் கடந்த ஆண்டு மார்ச்சில் அறிமுகம் செய்யப்பட்டது. கரோனா 2-வது அலையில் தொழிலாளர்களின் நலன் கருதி அதே சிறப்புத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

இதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இருந்து 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது 75 சதவீத வைப்பு தொகை, இதில் எது குறைவோ அந்த தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். இதைவிட குறைவான தொகையை எடுக்கவும் விண்ணப்பிக்கலாம்.

கரோனா சிறப்பு முன்பணம் எடுக்கும் திட்டம் வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப் பினர்களுக்கு பேருதவியாக இருக்கும். குறிப்பாக ரூ.15,000-க்கும் குறைவான மாத ஊதியம் பெறுவோர் பெரிதும் பயன் அடைவர். இந்த திட்டத்தில் இதுவரை 76.31 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ரூ.18,698.15 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முதல் கரோனா அலையின்போது இபிஎப் நிதியில் இருந்து முன்பணம் எடுத்தவர்கள் இப்போதும் முன்பணத்தை எடுக்கலாம். தற்போதைய நடைமுறை களின்படி விண்ணப்பித்த 20 நாட்களில் பணம் விநியோகம் செய்யப்படுகிறது. கரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு விண்ணப்பித்த 3 நாட்களில் முன்பணம் வழங்க இபிஎப்ஓ உறுதி பூண் டுள்ளது. இதன்படி கே.ஒய்.சி. படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தானியங்கி நடைமுறையில் விரைவில் பணம் விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய விதிகள் அமல்

பிஎஃப் கணக்குகளுக்கான விதி களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் புதிய விதிகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன.

புதிய விதிகளில் பிஎஃப் கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படுவது நிறுவனங்களின் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத் தில் பணியாளர்களின் பிஎஃப் கணக் கில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகை வரவு வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு விதி பிரிவு 142-ன் கீழ் பதிவு செய்தல், சலுகைகள் பெறு தல் மற்றும் பிற பரிவர்த்தனைகளுக்கு பணியாளர்கள் மற்றும் முறைப்படுத்தப் படாத துறை பணியாளர்கள் 12 இலக்க ஆதார் எண்ணை வழங்குவது கட்டாயம் என்று தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த நடவடிக்கை சமூக பாது காப்பு திட்டங்களின் கீழ் பயன்பெறு பவர்களின் தரவுகளைச் சேகரிப்பதற்காக வும் உதவும் என்று தொழிலாளர் துறை செயலர் அபூர்வ சந்திரா கூறியுள்ளார். இதில் குறிப்பாக முறைப்படுத்தப்படாத துறை மற்றும் புலம்பெயர் தொழிலாளர் களின் தரவுகள் சேகரிக்கப்படும் என்றார்.

பிஎஃப் கணக்குகளில் ஆதார் இணைக்கப்படவில்லை எனில் எலெக்ட்ரானிக் சலான் மற்றும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in