

உத்தரபிரதேசத்தில் நேற்று இந்தி மொழி பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நாளை ஒட்டி உ.பி.யின் அனைத்து இந்திபத்திரிகையாளர்களுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்துதெரிவித்தார். அப்போது, கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங் கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
ஆதித்யநாத் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தி மொழி பத்திரிகையாளர்கள் நாட்டை முன்னேற்றுவதில் பெரும் பங்கு வகித்துள்ளனர். இவர்களு்க்கு ஆதரவளிப்பது எனது கடமை. தற்போதைய சூழலில் உயிரை பணயம் வைத்து இந்தி மொழிபத்திரிகையாளர்கள் கரோனா தொற்று தொடர்பான செய்திகளை துல்லியமாக அளிப்பது உதவியாக உள்ளது’ எனக் குறிப் பிட்டுள்ளார்.
கரோனாவால் உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகள் பரா மரிப்பு செலவையும் உ.பி. அரசு ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.