

ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையது (79) திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, டெல்லி யில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் நேற்று அனுமதிக்கப் பட்டார்.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டில் சையது இருந்தபோது, நேற்று காலை யில் திடீரென அவருக்கு அசவுகரி யம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனி விமானம் மூலம் டெல்லிக்கு வந்த அவர் எய்ம்ஸ் மருத்துவ மனையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் அனுமதிக்கப் பட்டார்.
இதுகுறித்து எய்ம்ஸ் செய்தித் தொடர்பாளரும் அவசர சிகிச்சைப் பிரிவின் கூடுதல் பேராசிரியருமான டாக்டர் அமித் குப்தா கூறும்போது, “சையதுக்கு காய்ச்சல் ஏற்பட் டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிறப்பு மருத்துவர் கள் குழு அவரது உடல் நிலையை கண்காணித்து வரு கிறார்கள்” என்றார்.