

டெல்லி தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரி கள், அமைச்சரவை முடிவுகள் உட்பட ஊழல் வழக்குடன் தொடர் பில்லாத கோப்புகளை எடுத்துச் சென்று விட்டனர் என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக் கெட் சங்கம் (டிடிசிஏ) தொடர்பான கோப்புகளை திறந்து பார்ப்பதற்கா கவே இந்த சோதனை நடத்தப் பட்டதாகவும் கேஜ்ரிவால் திடுக் கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
டெல்லி முதல்வரின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் மீதான ஊழல் புகார் தொடர்பாக, டெல்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன் தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கைக்கு கேஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் ராஜேந்திர குமார் மீதான ஊழல் வழக்குக்கு தொடர்பே இல்லாத பல கோப்பு களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக முதல்வர் கேஜ்ரி வாலும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் நேற்று குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக கேஜ்ரிவால் நேற்று ட்விட்டரில் கூறும்போது, “எனது அலுவலகத்தில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், சோதனைக்கு தொடர்பில்லாத கோப்புகளை பறிமுதல் செய்துள் ளனர். அமைச்சரவை முடிவு தொடர் பான கோப்புகளும் அதில் அடங்கும்.
மேலும் டிடிசிஏ செயல்பாடு குறித்து டெல்லி அரசு ஆய்வு செய்து வந்தது. இதனால் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கவலை அடைந்துள்ளார். அதனாலேயே அந்தக் கோப்புகளை சிபிஐ அதி காரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக நான் ஊடகங் களுக்கு பேட்டி கொடுத்த பிறகு சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அந்தக் கோப்பு களை அவர்கள் எடுத்துச் சென்றார் களா இல்லையா என தெரிய வில்லை. மேலும் எனது அலுவலகத் தில் சோதனை நடைபெறவில்லை என அருண் ஜேட்லி நாடாளுமன்றத் தில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நாடாளுமன்றத்தில் அவர் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார்” என்றார்.
துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறும்போது, “நவம்பர், டிசம்பர் மாதத்தில் கோப்புகள் நகர்ந்தது தொடர்பான பதிவேட்டை யும் போக்குவரத்துத் துறை தொடர் பான 3 கோப்புகளையும் சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ள னர். டிடிசிஏ கோப்புகளை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தக் கோப்புகளை பறிமுதல் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் இதுபற்றி கேஜ்ரிவால் பிரச்சினை எழுப்பியதால் அவற்றை விட்டுச் சென்றனர்” என்றார்.
மேலும் சோதனையின்போது சிபிஐ அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் கோப்புகளின் பட்டியலை உள்ளடக் கிய படத்தையும் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
சிபிஐ விளக்கம்
சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட கோப்புகளும் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் தேவ்ப்ரீத் சிங் கூறும்போது, “சட்டப்படி சாட்சிகள் முன்னிலையில்தான் 14 இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனை யின்போது பறிமுதல் செய்யப்பட்ட கோப்புகள் நீதிமன்றத்தில் சமர்ப் பிக்கப்படும்” என்றார்.
ஐஏஎஸ் அதிகாரியான ராஜேந்திர குமார், தனது அதிகாரத் தைப் பயன்படுத்தி அரசு ஒப்பந்தங் களை ஒரு குறிப்பிட்ட நிறுவனத் துக்கு வழங்கியதாக சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக 14-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் மேலும் 6 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவரது வங்கிக் கணக்கில் ரூ.28 லட்சம் இருப்பு இருப்பது தொடர் பான ஆவணம் மற்றும் ஐசிஎஸ்ஐஎல் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குநர் ஏ.கே.துகல் பெயரில் ரூ.1.66 கோடி வைப்பு நிதி இருப்பது தொடர்பான ஆவணம் ஆகியவற்றை சிபிஐ பறிமுதல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ராஜேந்திர குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று காலை 9.40 மணிக்கும் குமார் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.