

தொகுதி வளர்ச்சிப் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண் டும், அரசு திட்டங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்ப வேண்டும், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நன்னடத்தையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரைகளை கூறியுள்ளார்.
மக்களவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 பாஜக எம்.பி.க்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை டெல்லி அருகே ஹரியாணா மாநிலத்தில் உள்ள சுரஜ்கண்டில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
குடும்பமாக செயல்பட வேண்டும்
நானும் முதல்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன். உங்களைப் போன்றே மூத்த எம்.பி.க்களிடம் இருந்து பல்வேறு விஷயங்களை கற்று வருகிறேன். உங்கள் நட்பு வட்டாரத்தை விரிவுபடுத்தி மற்ற வர்களிடம் இருந்து புதிய விஷயங் களை கற்றுக் கொள்ளுங்கள்.
அரசியலில் சண்டை சச்சரவு களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடி யாது. இதை கருத்திற் கொண்டு சிறிய விஷயங் களை பெரிதுபடுத்தக் கூடாது, நமக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை ஊடகங்களில் பகிரங்கமாகப் பேசக்கூடாது. நாம் ஓர் குடும்பமாக ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.
நாடாளுமன்றத்துக்கு உள்ளே யும் வெளியேயும் நம்மை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண் டிருக்கிறார்கள். எனவே மற்ற வர்களுக்கு முன்மாதிரியாக நன்ன டத்தை, நல்லெண்ணம், மிகச் சிறந்த செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்கள் பணி ஆற்றுங்கள்.
தொகுதி வளர்ச்சிப் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள், மத்திய அரசின் திட்டங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடம் பரப்புங்கள். அரசு திட்டப் பணிகளில் ஊழலுக்கு ஒருபோதும் இடம் அளிக்கக்கூடாது.
நாடாளுமன்றத்தின் விதிகளை பகவத் கீதை போல் பின்பற்ற வேண்டும். அதில் இருந்து சிறிதளவுகூட தடம் பிறழக்கூடாது. ஏதேனும் பிரச்சினை எழுந்தால் அமைச்சர் ராஜ்நாத் சிங்கையோ அல்லது என்னையோ அணுகலாம். இவ்வாறு அவர் பேசினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 7-ம் தேதி தொடங்கு கிறது. இதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் எம்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.
இறுதிநாளான ஞாயிற்றுக் கிழமை கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சிறப்பு உரை யாற்ற உள்ளார்.