கர்நாடக மேலவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி: பாஜகவும் 6 இடங்களைக் கைப்பற்றியது

கர்நாடக மேலவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி: பாஜகவும் 6 இடங்களைக் கைப்பற்றியது
Updated on
1 min read

கர்நாடக ச‌ட்ட மேலவை தேர்த லில் காங்கிரஸ் கட்சி 13 தொகுதி களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 6 தொகுதி களில் வென்றது.

கர்நாடக சட்ட மேலவையில் மொத்தமுள்ள 72 உறுப்பினர்களில் 25 காலியிடங்களுக்கான தேர்தல் கடந்த 27-ம் தேதி தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கிய‌து.

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் சொந்த தொகுதி யும், பாஜக செல்வாக்கு மிக்க‌ தொகுதியுமான ஷிமோகாவை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக வேட்பாளர் சித்தராமண்ணா மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட் டார். இதே போல ரெட்டி சகோ தரர்களின் கோட்டையாகவும், பாஜக பலம் வாய்ந்த தொகுதி யாகவும் கருதப்படும் பெல்லாரியி லும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கடந்த முறை பாஜக வசம் இருந்த தக்ஷின கன்னடா, கொப்பல், ரெய்ச்சூர் உள்ளிட்ட தொகுதிகளை யும் காங்கிரஸ் கைப்பற்றி மொத்தம் 13 இடங்களில் வென்றது.

உடுப்பி, குடகு, பெல்காம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது. மூத்த தலைவர் களான எடியூரப்பா, அனந்தகுமார், சதானந்தகவுடா, ஈஸ்வரப்பா உள் ளிட்டோர் சரியாக பிரச்சாரம் செய்யாததாலே பாஜக தோல்வி அடைந்ததாக அக்கட்சி தொண்டர் கள் குற்றம் சாட்டினர்.

கோலார், கொப்பல் உள்ளிட்ட 4 தொகுதிகளில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத வெற்றிபெற்றது. ஆனால் தேவகவுடாவின் சொந்தத் தொகுதி யான ஹாசனில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

குடும்ப அரசியல், கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டி யிட்டது ஆகிய காரணங்களால் மஜத மூன்றாம் இடத்துக்கு தள்ளப் பட்டதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

சுயேட்ச்சையாக களமிறங்கிய காங்கிரஸ் முன்னாள் சட்டமேலவை உறுப்பினர் விவேக் ராவ் பாட்டீல் உட்பட 2 சுயேட்ச்சைகளும் வெற்றி பெற்றனர்.

காங்கிரஸ் பெரும்பான்மை

மொத்தம் 75 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டமேலவை யில் காங்கிரஸூக்கு 28 உறுப் பினர்கள் மட்டுமே இருந்தனர். இத னால் சட்டமேலவையில் முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கு பெரும் சவாலை சந்தித்து வந்தது. இந்நிலையில் தற்போது 13 தொகுதிகளை கைப் பற்றி இருப்பதன் மூலம் காங்கிரஸ் சட்ட‌மேலவையில் பெரும்பான்மையை (41 உறுப் பினர்கள்) பெற்றுள்ளது.

முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறும்போது, ''காங் கிரஸ் கட்சிக்கு சரியான நேரத்தில், மிகவும் தேவையான வெற்றி கிடைத்திருக்கிறது. கர்நாடக‌ மக்களை நம்பி தனித்து போட்டி யிட்டு இந்த வெற்றியை பெற்றிருக் கிறோம். எதிர்க்கட்சிகளின் பொய் யான குற்றச்சாட்டுகளையும், போட்டி வேட்பாளர்களின் இடை யூறுகளையும் தாண்டி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி''என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in