Published : 30 May 2021 03:11 AM
Last Updated : 30 May 2021 03:11 AM

பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையின மக்களுக்கு இந்திய குடியுரிமை தர வேண்டும்: 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு

"பாகிஸ்தான், வங்கதேசம் உள் ளிட்ட நாடுகளில் இருந்து வெளி யேறி இந்தியாவில் தஞ்சம் அடைந் திருக்கும் சிறுபான்மை சமூக மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என 5 மாநிலங்களைச் சேர்ந்த 13 மாவட்ட ஆட்சியர் களுக்கு மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக் கான விதிகள் இன்னமும் வகுக் கப்படாத நிலையில், ஏற்கனவே இருக்கும் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவை செயல்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடு களில் இருந்து வெளியேறி இந்தியா வில் தஞ்சம் அடைந்துள்ள முஸ் லிம் அல்லாத மதப் பிரிவினருக்கு குடியுரிமை வழங்கும் விதமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இச்சட்டமானது முஸ்லிம்களுக்கு எதிராக இருப்ப தாக கூறி, நாடு முழுவதும் பல் வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இருந்தபோதிலும், கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டது.

மேற்குறிப்பிட்ட நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடி யேறிய இந்துக்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், சமண மற்றும் பவுத்த மதங்களைச் சேர்ந்தவர் களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதே இச்சட்டத்தின் அடிப் படை நோக்கமாகும்.

இதனிடையே, இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட போதிலும் இதற்கான விதிமுறைகள் இன்ன மும் வகுக்கப்படவில்லை. இதற்கு கரோனா பரவலும் ஒரு காரண மாக கூறப்படுகிறது. எனவே, இந்த சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதில் காலத்தாமதம் நிலவி வருகிறது.

இந்நிலையில், தற்போது நடை முறையில் இருக்கும் பழைய குடியுரிமைச் சட்ட விதிகளைப் பின்பற்றி, தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மேற்கூறிய பிரிவினருக்கு இந் தியக் குடியுரிமையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி, ராஜ்கோட், பதான், வதோ தரா, சத்தீஸ்கரில் உள்ள துர்க், பலோடாபஜார், ராஜஸ்தான் மாநி லத்தின் ஜலோர், உதய்பூர், பாலி, பார்மர், சிரோஹி, ஹரியாணாவின் ஃபரிதாபாத் மற்றும் பஞ்சாப் மாநி லத்தின் ஜலந்தர் ஆகிய 13 மாவட் டங்களின் ஆட்சியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள் துறை அமைச்சகம் சார்பில் வெளி யிடப்பட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று அவர் களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறை யில் இருக்கும் 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின் 5-வது பிரிவின் கீழ் அவர்களை இந்தியக் குடிமக்களாக பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், 6-வது பிரிவின் கீழ் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமைக்கான சான்றிதழை வழங்க வேண்டும்.

எத்தனை பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவற்றை 7 நாட் களுக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆன்லைன் மூலமாக அனுப்பி வைக்க வேண் டும். இவ்வாறு அந்த அறிவிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x