Published : 30 May 2021 03:11 AM
Last Updated : 30 May 2021 03:11 AM

கரோனா எங்கிருந்து தோன்றியது?- விசாரணைக்கு இந்தியா ஆதரவு

புதுடெல்லி

கரோனா வைரஸ் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவி யதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் சீனா இதை மறுத்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு மார்ச் மாதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் அந்த அறிக்கை திருப்திகரமாக இல்லை என அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தெரி வித்தன.

எனவே, கரோனா வைரஸின் தோற்றம், பரவல் குறித்து சர்வ தேச விசாரணை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு இந்தியாவும் ஆதரவு வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறும்போது, ‘‘கரோனா வைரஸின் தோற்றம் குறித்த விசாரணை முக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்கெனவே உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணைகளை மேற்கொள்வதில் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். அதன் மூலம் மட்டுமே இந்தப் பேரழிவு குறித்து ஒரு முடிவுக்கு சர்வதேச நாடுகள் வரமுடியும்’ என்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு 90 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். அதற் குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சீனாவிடம் கேட்கக் கூடிய கேள்விகள், கண் டறியப்பட வேண்டிய புள்ளிவிவரங்கள் குறித்து புலனாய்வுஅமைப்புகளிடம் அவர் ஆலோ சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x