Published : 01 Jun 2014 11:23 AM
Last Updated : 01 Jun 2014 11:23 AM

விமான நிலையங்களில் எங்களுக்கு சலுகை வேண்டாம்: பிரியங்கா கடிதம்

விமான நிலையத்தில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் வழங் கப்படும் சிறப்பு சலுகைகளை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு, சிறப்பு பாதுகாப்பு படையின் (எஸ்.பி.ஜி) தலைவருக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வதேரா கடிதம் எழுதியுள்ளார்.

விமான நிலைய பரிசோதனைக ளில் இருந்து விலக்கு பெறும், மிக மிக முக்கியப் பிரமுகர்கள் பட்டியலில் ராபர்ட் வதேரா பெயர் இடம்பெற்றுள்ளது. மத்தியில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், பட்டியலில் இருந்து வதேராவின் பெயர் நீக்கப்படவிருப்பதாக செய்தி வெளியானது.

இந்நிலையில் பிரியங்கா தனது கடிதத்தில், “இந்த சிறப்பு சலுகையை நானோ, எனது குடும்பத்தினரோ கேட்டுப் பெறவில்லை. நாங்கள் குடும்பத்து டன் பயணம் செய்யும்போது, விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில், இந்த சலுகை வெளிப் படையாக வழங்கப்பட்டது. இந்தப் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கும்படி என்னிடம் பலமுறை கூறியுள்ளார்.

மேலும் அவரது தனிப் பட்ட விமானப் பயணங்களில் அவர் இந்தச் சலுகையை பயன்படுத் தியதில்லை. தற்போது இந்தப் பட்டியலில் இருந்து எனது கணவரின் பெயரை நீக்குவது குறித்து புதிய அரசு பரிசீலிப்பதாகத் தெரிகி றது. இந்நிலையில் நாங்கள் குடும்பத் துடன் பயணம் செய்யும்போது எனக்கும், எனது குழந்தைகளுக்கு மட்டும் சலுகை வழங்கப்படுவது சரியல்ல என்று நான் கருதுகிறேன்.

எனவே எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த சலுகையை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x