கரோனா சிகிச்சை; கூடுதல் கட்டணம் பெற்ற தனியார் மருத்துவமனைகள்: வட்டியுடன் வசூலிக்க நொய்டா மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கரோனா சிகிச்சைக்காக உத்தரப்பிரதேச அரசு நிர்ணயித்ததை விட அதிகமான கூடுதல் கட்டணங்கள் பெற்றதாக நொய்டாவில் புகார்கள் எழுந்துள்ளன. இதன் மீது விசாரணை நடத்தி அத்தொகையை வட்டியுடன் வசூலிக்கப் போவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

டெல்லியை ஒட்டியுள்ள தொழில்நுட்ப நகரமான நொய்டாவில் பெருநிறுவனங்களின் உள்ளிட்ட பல தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இவைகளின் பலவற்றில் கரோனா சிகிச்சைக்காகக் கூடுதலாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதாகப் புகார்கள் குவிந்துள்ளன.

இவற்றை பெறவேண்டி தனியாக ஒரு வாட்ஸ்அப் எண் அதன் கவுதம்புத்நகர் மாவட்ட ஆட்சியர் எல்.ஒய்.சுஹாஸ்.ஐஏஎஸ் வெளியிட்டிருந்தார். இந்த எண்ணில், ஏராளமானப் புகார்கள் ஆதாரங்களுடன் குவிகின்றன.

இதனால், அவற்றின் மீது முறையான விசாரணை நடத்தி தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என கவுதம்புத்நகர் ஆட்சியர் சுஹாஸ் அறிவித்துள்ளார். இதற்காக அவர், மருத்துவர்களுடன் கூடிய ஒரு ஒருங்கிணைப்புக்குழுவையும் அமைத்துள்ளார்.

இது குறித்து கவுதம்புத்நகர் ஆட்சியரான எல்.ஒய்.சுஹஸ் கூறும்போது, ‘அரசு நிர்ணயித்த கட்டணங்களை மீறி பலரும் கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பது உறுதியாகி உள்ளது.

இவர்களிடம் கூடுதல் தொகையை வட்டியுடன் சேர்த்து வசூலித்து உரியவரிடம் ஒப்படைக்கப்படும். இத்துடன் தவறு செய்த மருத்துவமனைகளின் மீது தொற்று நோய் சட்டத்தின் கீழ் வழக்குகளும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

கோரக்பூரில் முதல் நடவடிக்கை

இதுபோன்ற நடவடிக்கை, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் முதன்முறையாகத்

துவங்கப்பட்டது. இம்மாவட்ட ஆட்சியரும் தமிழருமான கே.விஜயேந்திரபாண்டியன் ஐஏஎஸ் இதை செய்ததுடன் சில மருத்துவமனகளுக்கு சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதையடுத்து, உ.பி.யின் பல்வேறு மாவட்டங்களின் தனியார் மருத்துவமனைகள் மீது புகார்கள் குவியத் துவங்கின. இதனால், அம்மாட்ட ஆட்சியர்களும் கோரக்பூர் வழியிலான நடவடிக்கையில் பல ஆட்சியர்களும் இறங்கத் துவங்கியிருப்பது பாராட்டுக்குரியதாகி விட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in