

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி திட்டம் அமலில் உள்ளது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள மையம் தொலை விடங்களில் அமைந் திருந்தால், அங்கு முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதை தடுக்க அவர்களின் வீடுகளின் அருகே தடுப்பூசி மையம் அமைக்க நேற்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
வீட்டுக்கு அருகில் கரோனாதடுப்பூசி மையங்கள் கீழ்க்காணும் தகுதியுள்ளவர்களுக் காக சிறப்பாக ஏற்பாடுசெய்யப்படும். மற்ற எல்லா வயதினருக்கும் தற்போதுள்ள தடுப்பூசி மையங்கள் தொடரும்.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 60 வயதுக்கு கீழான, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காக இந்த மையங்கள் அமைக்கப்படும்.
வீடுகளின் அருகே பஞ் சாயத்து அலுவலகம், துணை சுகாதார மையங்கள், சுகாதார மையங்கள், சமூக நலக்கூடங்கள், வாக்குச்சாவடி கள், பள்ளிகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், முதியோர் இல்லங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கலாம். அவற்றில் தடுப்பூசி போட தனி அறை, காத்திருக்கும் பகுதி, ஊசி போட்ட பின்னர் 30 நிமிடங்கள் இருந்து செல்ல கண்காணிப்பு அறை இருக்க வேண்டும். இவற்றை கோவின் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தடுப்பூசி மையத்தினை முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியான தாக, இணக்கமானதாக மாற்றவேண்டும்.
இந்த பரிந்துரைகளை அனைத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அமைக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.