Published : 10 Jun 2014 10:04 AM
Last Updated : 10 Jun 2014 10:04 AM

நதிகள் இணைப்பு, வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம்: குடியரசு தலைவர்

நதிகள் இணைப்பு, வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் என குடியரசு தலைவர் உரையில் கூறப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்கள் விரைந்து நிறைவேற் றப்படும். அனைத்து வயல்களுக் கும் தண்ணீர் கிடைக்கும் வகையில் பிரதமரின் தேசிய நீர்ப்பாசன திட்டம் விரைவில் தொடங்கப்படும். நதிகளை இணைப்பது தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்படும்.

சரக்கு ரயில் போக்கு வரத்தில் வேளாண் விளைபொருள்களுக் காக “அக்ரி-ரயில் நெட் வொர்க்” ஏற்படுத்தப்படும்.

நாடு முழுவதும் உணவுப் பதப்படுத்தும் கிட்டங்கிகள், சேமிப்பு கிட்டங்கி வசதிகள் ஏற்படுத்தப்படும். தேசிய நிலம் பயன்பாட்டு திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப் படும். இதன்மூலம் தரிசு நிலங்கள் வேளாண் நிலங்களாக மாற்றப்படும். இதன்மூலம் வேளாண் விளைபொருள்களின் விலைஉயர்வு கட்டுப்படுத்தப்படும்.

கள்ளச் சந்தையில் உணவுப் பொருள்கள் பதுக்கப்படுவது தடுக்கப்படும். மாநில அரசுகளின் ஆலோசனைப்படி பொது விநியோகத் திட்டம் புதுப்பிக்கப் படும்.

வறுமை ஒழிப்பு

ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. அதன்படி வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மனித வளத்தை மேம்படுத்த தேசிய கல்விக் கொள்கை உருவாக் கப்படும். அனைத்து பள்ளிகளும் இணையதளம் மூலம் இணைக் கப்படும். தேசிய பன்நோக்கு திறன் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படும். சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறியும் வகையில் தேசிய விளையாட்டு திறன் தேடும் திட்டம் தொடங்கப்படும்.

தேசிய சுகாதாரத் திட்டம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை போன்று ஒவ்வொரு மாநிலத் திலும் அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தொடங் கப்படும்.

2019-ல் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. அதை யொட்டி “ஸ்வாச் பாரத் மிஷன்” என்ற தேசிய சுகாதாரத் திட்டம் தொடங்கப்படும்.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு

நாடாளுமன்றம், சட்டமன்றங் களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். பெண் குழந்தைகளைப் பாதுகாக் கவும் அவர்கள் கல்வியறிவு பெறுவ தற்கும் பிரம்மாண்ட விழிப்பு ணர்வு பிரச்சாரம் மேற்கொள் ளப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும்.

தேசிய கடல்பாதுகாப்பு

கங்கை நதி தூய்மைப்படுத் தப்படும். சுற்றுலா மேம்படுத்தப் படும். பாதுகாப்புத் துறை நவீனப் படுத்தப்படும். கடல் பாதுகாப் புக்காக தேசிய கடல்பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்படும். ராணுவ வீரர் களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குறைகளைக் களைய கமிஷன் அமைக்கப்படும்.

பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு தாராளமாக்கப்படும். பாதுகாப்புப் படையினருக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்கப் படும்.

அமெரிக்காவுடன் வலுவான உறவு

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனுடன் ராஜ்ஜியரீதியிலான உறவுகள் வலுப்படுத்தப்படும். அண்டை நாடுகளுடன் நல்லுறவு கடைப்பிடிக்கப்படும். எனினும் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படும் விஷயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல அரசு தயங்காது. 125 கோடி இந்திய மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும்.

இவ்வாறு குடியரசுத் தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x