

நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலின்போது தாக்கல் செய்யப் பட்ட பிரமாணப் பத்திரத்தில், முதல்வர் ஜிலாங் கடந்த 1980-ம் ஆண்டில் கோஹிமா கல்லூரியில் பி.ஏ பட்டப்படிப்பு படித்து முடித் திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
கல்வி தகுதி குறித்து ஆராய்ந்த மஸைஜோகோ நிஸா என்பவர், முதல்வர் ஜிலாங் தவறான தகவலை அளித்திருப்ப தாக புகார் எழுப்பினார்.
ஆவணங்களில், முதல்வர் ஜிலாங் பி.ஏ பட்டப்படிப்புக்கான தேர்வு எழுதியிருப்பது ஊர்ஜித மானது. ஆனால், அனைத்து பாடங்களிலும் அவர் தோல்வி அடைந்திருப்பது கண்டறியப் பட்டது.
இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக வரும் ஜனவரி, 7-ம் தேதி நேரில் ஆஜராகும் படி முதல்வர் ஜிலாங்குக்கு கோஹிமா நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.