

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் காரை ஏலத்தில் எடுத்த இந்து மகா சபா தலைவர் நேற்று அதை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையில் கடந்த 9-ம் தேதி நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கார், வீடு ஆகிய சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. அகில இந்திய இந்து மகாசபாவின் தேசிய தலைவரான சுவாமி சக்ரபாணி என்பவர் தாவூத் இப்ராஹிம் காரை ஏலத்தில் எடுத்தார். அப்போது தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான சமிக்ஞையாக தாதா தாவூத் இப்ராஹிம் காரை தீயிட்டு கொளுத்தப்போவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட அந்த கார் சக்ரபாணி யிடம் முறைப்படி ஒப்படைக் கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள இந்திரபுரம் என்ற ஊருக்கு எடுத்துச் சென்று, நேற்று அந்த காருக்கு தீ வைத்து கொளுத் தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.