கருப்புப் பூஞ்சை தொற்று; 80,000 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்து விநியோகம்: மத்திய அரசு தகவல்

கருப்புப் பூஞ்சை தொற்று; 80,000 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்து விநியோகம்: மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

மியூகோர்மைகோசிஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக 80,000 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார்.

கரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள சூழலில் புதிதாக கருப்புப் பூஞ்சை தொற்று பரவி வருகிறது. மிக அரிதான இந்த நோய் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடம் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தான இந்த தொற்றுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை அவசியம் என அறிவுறுத்தப்பட் டுள்ளது. இந்த நோய்க்கான சிகிச்சைக்கு ஆம்ஃபோடெரிசின் பி மிகவும் முக்கிய மருந்தாக உள்ளது.

தொற்று ஏற்பட்டுள்ளதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு ஆம்ஃபோடெரிசின் பி மருந்துகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. 2021 மே 26 அன்று 29,250 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்து அனைத்து மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டன.

கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படும் மியூகோர்மைகோசிஸ் தொற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தின் 80,000 குப்பிகள் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in