

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் யாஸ் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்யவுள்ளார்
கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டது. இந்த புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியது.
வடக்கு ஒடிசா-மேற்குவங்கம் கடற்கரை இடையே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே பாலசோர் அருகே நேற்று முன்தினம் கரையை கடந்தது. புயல் கரையை கடந்து முடிக்க 3 மணிநேரம் வரை ஆனது.
யாஸ் புயல் காரணமாக ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடந்து முடிக்க 3 மணிநேரம் வரை ஆனது.
யாஸ் புயல் காரணமாக ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. புயல் காரணமாக ஒடிசாவில் 6 லட்சம் பேரும், மேற்கு வங்கத்தில் 11.5 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்தன.
யாஸ் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உடனடியாகஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதிப்பின் மதிப்பீடு மற்றும் இது சம்பந்தமான விஷயங்கள் குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கமளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி புயல் மற்றும் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அங்கு செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி,இன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த இரு மாநிலங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டங்களுக்கு அவர் தலைமை வகிப்பார். இரண்டு மாநிலங்களில் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக பிரதமர் ஆய்வு செய்வார்.